பகவத்கீதையின்
ஒரு சிறிய தரிசனம்

தொகுப்பு:
ஸ்ரீல பக்திவினோத் தாகூரின் ரசிகரஞ்சனிலிருந்து
மற்றும்
ஸ்ரீல பிரபுபாதாவின் பகவத்கீதை உண்மையுருவிலிருந்து
___________
இவ்வாறு குழப்பமடைந்த சக்திவாய்ந்த போர் வீரனான அர்ஜுனன் முழுமுதற்கடவுளிடம் சீடனாக சரணடைந்தான். பிறகு, பரமபுருஷர் நித்திய உயிர்வாழி-ஜீவாத்மாவிற்கும் நிலையற்ற பௌதீக உடலிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளைப்பற்றி போதிக்கத்தொடங்கினார். அதன்பிறகு, நித்திய உயிர்வாழி ஜீவாத்மா ஒரு பௌதிக உடலிலிருந்து மற்றொன்றிற்கு உடல்மாற்றம் பெரும் வழிமுறையைப்பற்றியும், விதிக்கப்பட்ட கடமைகள் ரூபத்தில் பரப்ரம்மனின் திருப்த்திக்காக செய்யும் தன்னலமற்ற தொண்டைப்பற்றியும் மற்றும் தன்னுணர்வடைந்த பக்தனின் பண்பைப்பற்றியும் பரமபுருஷர் விவரித்தார்.
ப.கீ 2.1 சஞ்சயன் கூறினான் இவ்வாறு, கருணையினால் அர்ஜுனன் பீடிக்கப்பட்டு அவனது கண்களில் நீர் நிரம்பி, அவனது மனம் ஆழ்ந்த கவலையில் மூழ்கியதைப்பார்த்து மதுசூதனர் (கிருஷ்ணர்) பின்வருமாறு பேசினார்.
ப.கீ 2.2, 3 முழுமுதற்கடவுள் கூறினார்: அர்ஜுனனே! மிக நெருக்கடியான இச்சூழ்நிலையில் இப்புலம்பல்கள் உனக்கு எங்கிருந்து வந்தன? வாழ்கையின் நோக்கத்தை அறிந்த உனக்கு இது பொருந்துவதோ அல்லது உயர் லோகங்களுக்கு ஏற்றம் பெறச்செய்வதோ இல்லை; இது இகழ்ச்சியையே கொடுக்கும்.
ப.கீ 2.4 – 5. மதுசூதனரே! நான் எவ்வாறு எனது வந்தனைக்குரிய பீஷ்மரையும், துரோணரையும் எனது அம்புகளால் எதிர்தாக்குதல் செய்வேன்? அவர்களது வாழ்க்கையை அழித்து வாழ்வதைகாட்டிலும் பிச்சை எடுத்து நான் வாழ்கை நடத்துவதே மேல். பௌதிக ஆதாயத்திற்காக அவர்கள் ஏங்குபவர்களாக இருந்த போதிலும் நமக்கு அவர்கள் மேன்மையானவர்களே. அவர்கள் கொலைசெய்யப்படுவார்கள் எனில் நாம் அனுபவிப்பதனைத்தும் ரத்தக்கரை படிந்ததாகவே இருக்கும்.
- முற்பிறப்பு செயல்களின் வினைகளிலிருந்து பெறப்பட்ட ஒருவரின் உணர்வுநிலைக்கேற்ப, ஒரு குறிப்பிட்ட வகையான பௌதிக உடலைப்பெற்று, ஒரு குறிப்பிட்ட வகையான விதிக்கப்பட்ட கடமைகளில் அவர் ஆர்வம் கொள்கின்றார். இவைகள் பிராமணர் (அறிவாளியினர் வகுப்பு) க்ஷத்ரியர் (ஆட்சியாளர் வகுப்பு) வைசியர் (உற்பத்தியாளர் வகுப்பு) அல்லது சூத்திரர் (பணியாளர் வகுப்பு) ஆகும். ஒருவன் இவ்விதிக்கப்பட்ட கடமைகளை தூய்மையாக எந்த ஒரு கீழ்த்தரமான நோக்கமும் இல்லாமல் பரமபுருஷ பகவானை மையப்படுத்திச்செய்யும்பொழுது அவன் பாவத்தால் எப்பொழுதும் தீண்டப்படமாட்டான், மாறாக பரிபூரணத்தை நோக்கி முன்னேற்றமடைவான்.
1
ப.கீ 2.6 – 7. எது மேன்மையானது என்று என்னால் புரிந்துகொள்ளயிலவில்லை – அவர்களை வெல்வதா? அல்லது அவர்களால் வெல்லப்படுவதா? சிறுமனப்பான்மையின் பலவீனத்தினால் இப்பொழுது எனது விதிக்கப்பட்ட கடமைகளில் நான் முழுமையாக குழப்பமடைந்துள்ளேன் மேலும் அனைத்துவித மனதிடத்தையும் நான் இழந்துவிட்டேன். இச்சூழ்நிலையில் உங்களை நிச்சயமாக எது நல்லது என்று கேட்கின்றேன் மற்றும் உங்களிடம் முழுமையான அடைக்கலம் பெற்ற சீடனாக நான் சரணடைகின்றேன். தயவுசெய்து எனக்கு எடுத்துரையுங்கள்.
ப.கீ 2.8. எனது புலன்களை வாட்டுகின்ற இத்துக்கத்தை நீக்குவதற்கு எனக்கு எந்த ஒரு வழியும் தெரியவில்லை, மேலும் தேவர்களைப்போல வளம்பெற்ற மற்றும் விரோதிகளற்ற ராஜ்ஜியத்தை நான் வென்றாலும் கூட என்னால் இதை நீக்கயியலாது.
ப.கீ 2.9 – 10. குடாகேசன் (அர்ஜுனன்) இவ்வாறு கூறி “கோவிந்தரே! நான் போரிட மாட்டேன்” என்று கூறி மௌனமானான். அச்சமயம், இருதரப்பு சேனைகளுக்கு மத்தியில் புன்னகைத்தவாரே பரமபுருஷ பகவான் துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த அர்ஜுனனிடம் பின்வருமாறு கூறினார்.
ப.கீ 2.11. முழுமுதற்கடவுள் கூறினார்: நீ கற்றறிந்த வார்த்தைகளை பேசினாலும் கூட துயரப்பட தேவையற்றதிற்காக புலம்புகின்றாய். ஒரு கற்றறிந்த அறிஞனோ வாழ்பவர்களுக்காகவோ இறந்தவர்களுக்காகவோ புலம்புவதில்லை.
ப.கீ 2.12. , நிச்சயமாக நானோ நீயோ அல்லது இம்மன்னர்களோ இல்லாமல் இருந்த காலமோ இல்லை எதிர்காலத்திலும் நாம் இல்லாமல் இருக்கப்போவதுமில்லை.
- உண்மையில் உயிர்வாழி-ஜீவாத்மா அழிவற்றது மற்றும் நித்தியமானதாகும் (அது எப்பொழுதும் இறப்பதில்லை). ஜடவுடல் மட்டுமே மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து பரிதாபமாக இறக்கின்றது.
ப.கீ 2.13. (உடலையடைந்த) பந்தப்பட்ட உயிர்வாழி-ஜீவாத்மா தற்போதைய உடலில் குழந்தைப்பருவத்திலிருந்து இளமைக்கும் மற்றும் முதுமைக்கும் எவ்வாறு தொடர்ந்து மாற்றம் பெறுகின்றதோ, அதைப்போல இறப்பின் போது அது வேறொரு உடலுக்கு மாற்றம் பெறுகின்றது. ஒரு கற்றறிந்த அறிஞனோ இத்தகைய மாற்றத்தினால் குழப்பமடைவதில்லை.
ப.கீ 2.14. (முற்காலச்செயல்களின் வினைகளினால்) நிலைத்திறாமல் தோன்றி மறையும் இன்பமும் துன்பமும் கோடை காலமும் மற்றும் குளிர் காலமும் தோன்றி மறைவதை போன்றதே, கௌந்தேயனே. இவைகள் புலன்களின் உணர்வினாலேயே அனுபவப்படுகின்றன, பார்த்தனே. இவற்றால் நீ பாதிக்கப்படாமல், பொறுத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்,
- முற்காலச்செயல்களின் வினைகளைப்பற்றி ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவைகள் விதிக்கப்பட்ட கடமைகள் ரூபத்தில் தோன்றுகின்றன. எனவே, அவைகளை வாழ்வை துய்மைப்படுத்துவதற்காக ஆழ்ந்த கவனத்துடன் செய்வது அவசியம்; இல்லையேல், முற்காலச்செயல்களின் வினைகளின் முதலைவாய்ப்பிடியிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதானதல்ல.
2
ப.கீ 2.16 – 18 – [(உடல் முழுவதும் வியாபித்திருக்கும்) நித்திய உயிர்வாழி-ஜீவாத்மாவின் (விழிப்புற்ற அல்லது உறங்குநிலையிலுள்ள) உணர்வினால் இஜ்ஜடவுடல் உயிருடன் இருப்பதாக தோன்றுகின்றது; இல்லையேல், இஜ்ஜடவுடல் தனிப்பட்ட நிலையில் ஒரு பிணம் தான்.] நித்திய உயிர்வாழி-ஜீவாத்மாவின் நிலையற்ற உடலானது அழியப்போவது உறுதி, எனவே எழுந்து நின்று போர் புரிவாயாக பாரத்தனே.
ப.கீ 2.19 – 21 – (அழிவற்ற) நித்திய உயிர்வாழி-ஜீவாத்மாவிற்கு பிறப்போ அல்லது இறப்போ கிடையாது. ஜடவுடல் மட்டுமே மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து இறக்கின்றது
ப.கீ 2.22 – (பழைய ஆடையை கைவிட்டுவிட்டு) எவ்வாறு ஒரு மனிதன் புதிய ஆடையை ஏற்கின்றானோ, அதைப்போல பந்தப்பட்ட உயிர்வாழி-ஜீவாத்மா (தற்போதைய உடலை கைவிட்டுவிட்டு) புதிய உடலை ஏற்கின்றது.
- பந்தப்பட்ட உயிர்வாழி-ஜீவாத்மா பூரணநிலையை அடையும் வரை அடுத்தடுத்து தற்காலிக பௌதிக உடலை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றது. பூரணநிலையை அடைந்த பிறகு அது தனது நித்திய வீட்டிற்கு அதாவது ஆன்மீக உலகிற்கு திரும்பிச்செல்கின்றது. [ நாம் இப்பொழுது வாழ்கின்ற இந்த பௌதிக உலகமானது ஒரு கல்விக்கூடம் போன்றதாகும். இது நமது செயல் மற்றும் அதன் வினைகளின்படி கிடைக்கும் பிறப்பு மற்றும் இறப்பின் மூலமாக நமக்கு பாடம் கற்பிக்கின்றது. எனவே, இப்பௌதிக உலகம் மிருத்யு-லோகம் என்று அழைக்கப்படுகின்றது,]
ப.கீ 2.23 – 30. நித்திய உயிர்வாழி-ஜீவாத்மா ஆயுதத்தால் துண்டிக்கப்படவோ அல்லது நெருப்பால் எரிக்கப்படவோ அல்லது தண்ணீரால் நனைக்கப்படவோ அல்லது காற்றால் உலர்த்தப்படவோ முடியாதது. இருப்பினும், மஹா-பாஹனே, நித்திய உயிர்வாழி-ஜீவாத்மா பிறப்பெடுத்து இறப்பதாக கருதினாலும் கூட நீ புலம்பத்தேவையில்லை ஏனென்றால் பிறப்பெடுத்தொருவன் இறப்பது நிச்சயமே மீண்டும் பிறப்பதும் நிச்சயமே.
3
ப.கீ 2.31 – 36. க்ஷத்ரியன் என்ற முறையில் நீ உன்னுடைய குறிப்பிட்ட கடமையை கருத்தில் கொண்டு (அதர்மத்தை எதிர்த்து) போர் புரிவதைவிட வேறு எந்தவொரு சிறந்த கடமையும் உனக்கில்லை. உன்னுடைய விதிக்கப்பட்ட கடமையை செய்யத்தவறினால் நிச்சயமாக உனக்கு பாவமே வந்துசேரும். மக்கள் உனது அவகீர்த்தியைப்பற்றி எப்போதும் பேசுவார்கள் மேலும் மரியாதைக்குரிய மனிதனுக்கு அவமானம் மரணத்தை விடக்கொடியதாகும். உனது பெயரிலும் புகழிலும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த மாபெரும் போர்வீரர்கள் நீ பயந்து போர்க்களத்தை விட்டுச்சென்று விட்டதாக எண்ணுவர். இதைவிட துக்ககரமானது எதுவாக இருக்க முடியும்?
ப.கீ 2.37 – 38. ஒன்று நீ போரில் வெற்றிகண்டு ராஜ்ஜியத்தை அடைவாயாக, கௌந்தேயனே, அல்லது பெருமிதத்தக்க மரணத்தை அடைந்து உயர்நிலை அடைவாயாக. ஆகவே, நீ திடமனதுடன் எழுந்துநின்று மகிழ்ச்சி மற்றும் துக்கம், லாபம் மற்றும் நஷ்டம், வெற்றி மற்றும் தோல்வி ஆகியவற்றை கருதாமல் போரிடுவாயாக – இவ்வாறு, செய்தாயெனில், என்றென்றும் பாவத்தால் நீ தீண்டபடமாட்டாய்.
ப.கீ 2.39. இதுவரை நான் உனக்கு சாங்கிய யோகம் அதாவது செயல்களின் பகுப்பாய்வு முறையின் அடிப்படையில் விளக்கினேன், பார்த்தனே. நான் இப்பொழுது செயல்களின் பலன்களில் எந்த ஒரு ஆசையுமின்றி செயலாற்றுவதைப்பற்றி உனக்கு விளக்கப்போகின்றேன். ஒருவர் தமது விதிக்கப்பட்ட கடமைகளை இஞ்ஞானத்துடன் செய்தானெனில் நிச்சயமாக அவன் கர்மபந்தத்திலிருந்து தானே விடுபடுவான்.
ப.கீ 2.40, 41 அர்ஜுனனே, இப்பாதையில் நஷ்டமோ அல்லது குறைதலோ எதுவுமில்லை சிறிதளவு முன்னேற்றம் கூட ஒருவனை பௌதீக வாழ்க்கையின் மிகப்பெரிய பயத்திலிருந்து காப்பாற்றும். எவர்களெல்லாம் இப்பாதையில் திடமான மனஉறுதியுடன் உள்ளார்களோ அவர்களின் நோக்கம் உறுதியானதாகயிருக்கும் ஆனால் இவ்வாறு இல்லாதவர்களின் புத்தியோ, குரு-நந்தனனே, எண்ணிலடங்கா ஆசைகளுடன் களங்கப்பட்டு பல கிளைகளையுடையதாக இருக்கும்.
ப.கீ 2.42 – 43. குறுகிய புத்தியுடையவர்கள் வேதங்களின் வசீகரமான சொற்களில் பற்று கொண்டுள்ளனர், பார்த்தனே, அது பொதுவாக பலவிதமான பலன்நோக்குச்செயல்களை அதாவது பௌதீக சாதனைகளான ஸ்வர்கலோகங்களுக்கு ஏற்றம் பெறுதல், நற்பிறவியடைதல், அதிகாரம் போன்றவற்றை அடைவதற்காக பரிந்துரைக்கின்றன. புலனின்பத்தில் ஆழ்ந்த பற்றுதலையுடையவர் இதற்கு மேலானதெதுவுமில்லை என்று வாதிடுவர்.
- கீழ்தளத்திலுள்ள மக்களை ஊக்குவிப்பதற்காக வேதங்கள் பெரும்பான்மையாக பௌதிக உந்துதலினால் செய்யப்படும் சடங்கு வழிபாட்டை (தேவர்களுக்கு செய்யுமாறு) பரிந்துரைக்கின்றன, இதனால் அவர்கள் நாளடைவில் முன்னேற்றமடைந்து அதியுன்னத இலக்கான தூய பக்தித்தொண்டையடைவார். [குறிப்பு: விதிக்கப்பட்ட கடமைகளை ஒருவன் அர்ப்பணிப்பு-பாவனையுடன் எந்த ஒரு கீழ்த்தரமான நோக்கமும் இல்லாமல் பரமபுருஷ பகவானை மையப்படுத்தி செயலாற்றுதல் இதுவோ நாளடைவில் கடவுளின் அன்பிற்கு ஏற்றம்பெறச்செய்யும் இதுவே உண்மையில் தூய பக்தித்தொண்டாகும்.]
4
ப.கீ 2.44. புலன் இன்பத்திலும் பௌதிக ஐஸ்வர்யத்திலும் எவர்களுடைய மனம் அதிக பற்றுதல் கொண்டுள்ளதோ, அவர்களுக்கு தூய பக்தித்தொண்டிற்கான திடவுறுதி ஏற்படுவதில்லை.
ப.கீ 2.45, 46. பொதுவாக வேதங்கள் பௌதிக இயற்கையின் முக்குணங்களின் விஷயங்களைப்பற்றி (அதாவது செயல் மற்றும் அதன் வினைகளின் விஷயங்களைப்பற்றி) விவரிக்கின்றன, அர்ஜுனனே. நீ இந்நிலையை கடந்து தூய பக்தித்தொண்டில் நிலைபெறுவாயாக மற்றும் எப்பொழுதும் இருமைகளிலிருந்தும் லாபம் மற்றும் தற்காப்பு போன்ற கவலைகளிலிருந்தும் விடுபட்டு தன்னில் நிலை பெறுவாயாக.
- பௌதிக இயற்கையின் முக்குணங்கள் வேறு ஒன்றுமில்லை நம்மை ஆட்சிமை செய்யும் ஒரு சக்தியாகும். இது நமது முற்காலச்செயல்களிற்கேற்ப வாழ்கையின் ஒவ்வொரு அடியிலும் நம்மை கட்டுப்படுத்தி ஆட்சிமை செய்யும். நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நமது உணர்வுநிலையை நிர்ணயிக்கின்றது, மேலும் வாழ்கையின் இறுதியில் நாம் என்ன உணர்வுநிலையை பெற்றிருப்போமோ அதற்கேற்ப நமக்கு அடுத்த பௌதிகவுடல் கிடைக்கப்பெறுகின்றது (அது உயர்ந்த அல்லது தாழ்ந்த மனிதப்பிறவியாக இருக்கலாம் அல்லது 84 லட்சம் வகையான உயிரினங்களில் ஏதேனும் ஒரு பிறவியாகவும் இருக்கலாம்). [பத்ம புராணத்தில் 84 லட்சம் வகையான பௌதிகவுடல்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது அதில் 9 லட்சம் வகையான நீர்வாழி உடல்களும், 11 லட்சம் வகையான புழு பூச்சி உடல்களும், 20 லட்சம் வகையான மரம் செடி உடல்களும், 10 லட்சம் வகையான பறவை உடல்களும், 30 லட்சம் வகையான மிருக உடல்களும் மற்றும் 4 லட்சம் வகையான மனித உடல்களும் உள்ளன.]
ப.கீ 2.47. விதிக்கப்பட்ட கடமைகளை செய்ய மட்டுமே உனக்கு உரிமை உண்டு ஆனால் உனது உழைப்பினால் கிடைக்கும் பலனை அனுபவிக்க உனக்கு உரிமையில்லை (உனது தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே மட்டும் அவற்றை உபயோகிக்கலாமே தவிர புலன் இன்பத்திற்கான உனது ஆசைகளை பூர்த்தி செய்வதற்காக அல்ல), அர்ஜுனனே. உனது செயல்களின் பலன்களின் மீது எந்த ஒரு பற்றுதலையும் நீ வளர்த்துக்கொள்ளாதே ஏனெனில் அது (உனது முற்காலச்செயல்களின் வினைகளுக்கேற்ப) பௌதீக இயற்கையின் முக்குணங்களால் கடுமையாக கட்டுப்படுத்தப்படுகின்றது. மேலும், நீ உனது விதிக்கப்பட்ட கடமைகளை செய்யாமலிருக்கவும் எந்த ஒரு பற்றுதலையும் வளர்த்துக்கொள்ளாதே.
- பந்தப்பட்ட உயிர்வாழி-ஜீவாத்மா பொய்யகங்காரத்தின் தாக்கத்தினால் குழப்பமடைந்து தாங்களே செயல்களைச்செய்வதாக எண்ணுகின்றது ஆனால் உண்மையில் அவைகள் (அவனது முற்காலச்செயல்களின் வினைகளுக்கேற்ப) பௌதீக இயற்கையின் முக்குணங்களால் செயல்படுத்தப்படுகின்றன. – (ப.கீ.3.27)
5
ப.கீ 2.48 – 50. தனஞ்செயனே, நீ (உனது விதிக்கப்பட்ட கடமைகளை அர்ப்பணிப்பு-பாவனையுடன் ஒரு துளியளவு கூட கீழ்த்தரமான நோக்கமில்லாமல் செய்து) அனைத்துவித பௌதீக பலன் நோக்குச்செயல்களை கைவிடுவாயாக. எவனொருவன் தனது உழைப்பின் பலனை அனுபவிக்க விரும்புகின்றானோ அவன் கருமியே.
- 84 லட்சம் வகையான உயிரினங்களில் குறிப்பாக மனித வாழ்வானது கடக்க இயலாத இப்பௌதீக உலகத்தை கடப்பதற்காகவேயாகும். அனால், எவர்கலெல்லாம் இதை இந்நோக்கத்திற்காக உபயோகிக்காமல் அவர்களது உழைப்பின் அற்பமான பலனை அனுபவிப்பதற்காக வீணாக்குகின்றார்களோ அவர்கள் கருமிகளாக கருதப்படுகின்றார்கள்.
ப.கீ 2.51 – 53. எவரொருவருடைய புத்தி வேதங்களின் வசீகரமான சொற்களினால் சஞ்சலமடையாமலும் மேலும் பல்வேறு வகையான வேதச்சடங்குகளில் நாட்டம் கொள்ளாமலும் இருக்கின்றதோ, அவரே தளராத பக்தித்தொண்டில் திடமாக நிலைபெறுவார்.
- எவர்களெல்லாம் தூய பக்தித்தொண்டின் பாதையில் திடமாக நிலை பெற்றிருக்கின்றார்களோ, அவர்களுக்கு வேத சடங்குகளின் பாதை தேவையற்றதாகும். விதிக்கப்பட்ட கடமைகளை அர்ப்பணிப்பு-பாவனையுடன் செயல்படுத்தினால் (இங்கு பகவத்கீதையில் கூறியபடி), அதுவே நாளடைவில் கடவுளின் அன்பிற்கு ஏற்றம்பெறச்செய்யும் (ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் கூறியபடி), இதுவே கடவுளின் அன்பையடைவதற்கு இயற்கையான வழியாகும் அதேசமயம் வேத சடங்குகளின் பாதையானதோ விதிக்கப்பட்ட கடமைகளை செய்வதற்காகவோ அல்லது கடவுளின் அன்பையடைவதற்காகவோ உகந்ததானதல்ல அனால் இது கீழ்நிலையிலுள்ள மக்களுக்கு மிகவும் ஊக்குவிப்பதாகயிருக்கும்
ப.கீ 2.54. அர்ஜுனன் வினவினான்: எவர்களது மனமும் புத்தியும் இவ்வாறு நிலைபெற்றிருக்கின்றதோ, கேசவரே! அவர்களது சுபாவம் எப்படி இருக்கும்?
ப.கீ 2.55. முழுமுதற்கடவுள் கூறினார்: (புலன் இன்பத்திற்கான) தனது ஆசைகளை யாரொருவர் முழுமையாக துறக்கின்றாரோ மேலும் அவரது மனம் தன்னில் மட்டுமே திருப்தியடைகின்றதோ, பார்த்தனே, அவர் தூய்மையான உணர்வில் இருப்பதாக கருதப்படுகின்றார்.
ப.கீ 2.56, .57. பந்தப்பட்ட உயிர்வாழி-ஜீவாத்மா ஜடவுடலை பெற்றிருக்கும்வரை பௌதிக உலகத்தின் இருமைகளான மகிழ்ச்சி மற்றும் துக்கம், நல்லது மற்றும் கெட்டது, வெற்றி மற்றும் தோல்வி முதலியவற்றை (முற்காலச்செயல்களின் காரணத்தினால்) நிச்சயமாக அனுபவித்தே தீரவேண்டும். இத்தகைய இருமைகளால் பாதிக்கப்படாமலும், அவற்றை புகழாமலும் இகழாமலும் இருப்பவன் உன்னதஞானத்தில் திடமாக நிலைபெற்றிருப்பதாக கருதப்படுகின்றான்.
6
ப.கீ 2.58 – 61. எவ்வாறு தனது அங்கங்களை தனது கூட்டிற்குள் ஆமை இழுத்துக்கொள்கின்றதோ அதைப்போல யாரொருவர் தனது புலன்களை அதனுடைய பொருட்களிலிருந்து அகற்றிக்கொள்கின்றாரோ, அவர் உன்னதஉணர்வில் நிலைபெற்றிருப்பதாக கருதப்படுகின்றார்.
- ஒருவன் தனது புலன் இன்பத்திற்காக செய்யப்படும் செயல்களான மாமிசமுண்ணுதல், மது அருந்துதல், கள்ளத்தனமாக உறவு கொள்தல் (அதாவது திருமண வாழ்விற்கு புறம்பாக) மற்றும் சூதாடுதல் (அதாவது நேர்மையற்ற வருமானம்) இவைகளை ஸ்ரீமத் பாகவதத்தில் மிகவும் அருவருக்கத்தக்க கொடூரமான பாவச்செயல்களாக கூறப்பட்டுள்ளது. [குறிப்பு: இவைகளனைத்திலும் நேர்மையற்ற வருமானம் மிகவும் கொடியதாகும்.]
ப.கீ 2.62 – 68. ஒருவர் புலன் இன்பப்பொருட்களை தியானிப்பதனால் அவற்றின் மீது பற்றுதல் ஏற்படுகின்றது. இவ்வித பற்றுதலினால் காமம் உருவாகின்றது மேலும் கோபம் ஏற்படுகின்றது இதனால் ஒருவரது ஸ்ம்ரிதி சஞ்சலமடைகின்றது, இதனால் அவர் தனது மதியை இழக்கின்றார் மேலும் அவர் மீண்டும் இஜ்ஜடசுழலில் விழுகின்றார்.
ப.கீ 2.69. எல்லா பந்தப்பட்ட உயிர்வாழி-ஜீவாத்மாக்களுக்கு எதுயிரவோ அது தன்னிறைவு பெற்றாத்மாவிற்கு விழித்தெழும் நேரமாகும், மேலும் தன்னிறைவு பெற்றாத்மாவிற்கு எதுயிரவோ அது எல்லா பந்தப்பட்ட உயிர்வாழி-ஜீவாத்மாக்களுக்கு விழித்தெழும் நேரமாகும்.
- பந்தப்பட்ட உயிர்வாழி-ஜீவாத்மா புலன் இன்பத்தின் அற்ப ஆனந்தத்தினால் விழித்தெழுகின்றது ஆனால் நித்திய ஆனந்தத்தை தரும் ஆன்மீக வாழ்க்கையின் விஷயத்தில் உறங்கிக்கொண்டிருக்கின்றது ஆனால், தன்னிறைவு பெற்றாத்மாவிற்கோ முற்றிலும் இது புறம்பானதாகயிருக்கும்.
ப.கீ 2.70. என்றும்-நிறைந்த நிலைத்த-கடலில் ஆறுகள் தொடர்ந்து கலந்தாலும் எவ்வாறு பாதிக்கப்படுவதில்லையோ அதைப்போல (முற்காலச்செயல்களின் வினைகளின் காரணமாக) தொடர்ந்தெழும் ஆசைகளினால் எவர்கலெல்லாம் பாதிக்கப்படாமல் இருப்பார்களோ அவர்கள் மட்டுமே அமைதியை பெறமுடியும்; இவைகளை திருப்திப்படுத்த முயல்பவர்களுக்கோ அல்ல.
ப.கீ 2.71, 72 [(புலன் இன்பத்திற்கான) அனைத்து ஆசைகளையும் துறந்து] எவனொருவன் உரிமையாளன் என்னும் உணர்வையும் பொய்யகங்காரத்தையும் துறந்து வாழ்கின்றானோ, அவன் மட்டுமே உண்மையான அமைதியை அடையமுடியும். இவ்வாறு, (இறப்பின் போது கூட) ஒருவன் நிலைபெற்றாலும் கடவுளின் திருநாட்டையடைவான்.
7
முடிவுரை:
ஒருவரது விதிக்கப்பட்ட கடமைகள் பலவாக இருந்தாலும் கூட அவைகளை மூன்று வகையாக வகைப்படுத்தப்படலாம்.
- தொழில் சார்ந்த விதிக்கப்பட்ட கடமைகள் (வர்ணம்).
- பிராமணர், சத்ரியர், வைசியர், மேலும் சூத்திரர். (மருத்துவர், பொறியாளர், உழவர், ஆசிரியர், நிர்வாகி, போர்வீரர், வக்கீல், தொழிலாளர், முதலியன).
- குடும்பம் சார்ந்த விதிக்கப்பட்ட கடமைகள் (ஆஸ்ரமம்).
- பெற்றோர், குழந்தைகள், மாமனார்-மாமியார் மற்றும் பிறர் (உதாரணமாக புனிதாத்மாக்கள், சார்ந்த-உயிரினங்கள் அதாவது எல்லா உயிரினங்கள், முதலியன) இதை சார்ந்த விதிக்கப்பட்ட கடமைகள். [Note: Devotional service is not a ritualistic activity; it is an act of responsibility (performed through both body and self i.e., body should engross in prescribed duty and self should drown in love of god).]
- ஆன்மீக-தவம் சார்ந்த விதிக்கப்பட்ட கடமைகள் (சாதனா).
- ஒருவரின் உணர்வுநிலைகேற்ப அவருடைய சாதனாவின் தலம் வேறுபடுகின்றன: விராட்-ரூபம், சாயுஜ்ய, சாலோக்கிய, சார்ஷ்டி, சாரூப்ய, சாமீப்ய, சாந்த, தாஸ்ய, சக்ய, வாத்ஸல்ய, ஷ்ருங்கார மற்றும் ஷ்ருங்கார-ஔதார்ய. [இந்த யுகத்திற்கு (கலியுகத்திற்கு) (எல்லோருக்கும்) பரிந்துரைக்கப்பட்ட சாதனாயென்பது முழுமுதற்கடவுளின் புனித நாமத்தை (விருந்தாவன வாசிகளைப்போல மிகுந்த பற்றுதலுடன்) ஒன்று கூடி பாடுவதேயாகும்.]
ஒருவர் இம்மூன்று வகைப்பட்ட விதிக்கப்பட்ட கடமைகளை எந்த ஒரு கவனக்குறைவில்லாமலும் மேலும் ஒரு துளியளவு கூட கீழ்த்தரமான நோக்கமில்லாமலும் செய்தால் அது பக்தித்தொண்டு என்றழைக்கப்படுகின்றது. ஒருவரின் பக்தித்தொண்டு நாளடைவில் முதிர்ச்சியடைந்து கடவுளின் அன்பில் மூழ்கினால் அது தூய பக்தித்தொண்டு என்றழைக்கப்படுகின்றது (இது தன்னின் (உயிர்வாழி-ஜீவாத்மாவின்) செயல் உடலினுடையது அல்ல). (இவற்றைப்பற்றி ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது).
ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை (128,129) கூறுகின்றது,
சாது-சங்க நாம-கீர்த்தன பாகவத-ஷ்ரவன
மதுரா-வாச ஸ்ரீமூர்திர ஷ்ரத்தாய சேவனா
சகல-சாதனா ஷ்ரேஷ்த ஏய் பஞ்ச அங்க
கிருஷ்ண-பிரேம ஜன்மாய ஏய் பஞ்சேர அல்ப சங்க
8
பக்தித்தொண்டின் இவ்வைந்து மிக முக்கிய அங்கங்களை (விருந்தாவன வாசிகளைப்போல மிகுந்த பற்றுதலுடன்) (சுயம்-ரூப அதாவது நபர்-ரூப கிருஷ்ணருடன்) பின்வரும் நான்கு உறவுகளில் ஏதாவது ஒன்றில் ஷ்ருங்கார, வாத்ஸல்ய, சக்ய அல்லது தாஸ்யத்தில் செய்தால், ஒருவர் நிச்சயமாக உடல்சார்ந்த வாழ்கையைக்கடந்து கிருஷ்ணரின் தூய அன்பை இப்பிறப்பிலேயே அடையமுடியும். இதுவே ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் சாரமாகும். (ஆதிலீலை 3.11)
[ஜாக்கிரதை: பக்தித்தொண்டின் இவ்வைந்து மிக முக்கிய அங்கங்களை ஒருவன் சடங்குச்செயல்களாக ஆற்றக்கூடாது, ஏனெனில் இவைகள் சுயம்-ரூப அதாவது நபர்-ரூப கிருஷ்ணருடன் அன்புப்பரிமாற்றம் செய்வதற்கான மிக முக்கிய சாதனங்களாகும். (இது தன்னின் (உயிர்வாழி-ஜீவாத்மாவின்) செயல் உடலினுடையது அல்ல)
முக்கிய ஸ்லோகங்கள்:
நான் பரப்ரம்மன் ஆகையால் இம்மூவுலகங்களிலும் விதிக்கப்பட்ட கடமைகள் என்று எனக்கு எதுவுமில்லை, பார்த்தனே. நான் அடைய வேண்டியதோ அல்லது எனக்கு வேண்டியதோ எதுவுமில்லை – இருப்பினும் எனது விதிக்கப்பட்ட கடமைகளை நான் கவனமாக செய்கின்றேன். (ப.கீ 3.22.)
அர்ஜுனன் கூறினான்: ஒருவன் சுயவிருப்பமின்றியும் கூட பாவக்காரியங்களை செய்ய பலவந்தமாக தூண்டப்படுவதற்கு உண்மையில் என்ன காரணம்? வார்ஷ்நேயரே! (ப.கீ 3.36.)
முழுமுதற்கடவுள் கூறினார்: அர்ஜுனனே, நிச்சயமாக, இதற்கு காமமே காரணம். இது முற்காலச்செயல்களினால் கிடைக்கப்பெற்ற ரஜோ குணத்தினால் பெறப்பட்டதாகும். காமம் (அனைத்தையும் விழுங்கும்) ஒரு மிகபெரிய விரோதியாகும் நாளடைவில் இது கோபமாக மாறுகின்றது. இதனால், பரத-ரிஷபனே, வாழ்கையின் ஆரம்பத்திலேயே புலன்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பாவத்தின் பெரும் சின்னமான இக்காமத்தை நீ அடக்குவாயாக மேலும் இவ்வாறு நீ ஞானத்தையும் தன்னுணர்வையும் அழிக்கும் இவ்விரோதியை அழிப்பாயாக. (ப.கீ. 3.37, 41.)
பாவிகளிலேயே நீ பெரும் பாவியாக கருதப்பட்டாலும், தெய்வீக ஞானம் என்னும் படகில் நீ நிலைபெற்றால் மிகச்சுலபமாக பௌதிக உலகெனும் கடலை கடக்கயியலும். எவ்வாறு பிரகாசமாக கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு விறகை எரித்து சாம்பலாக்குகின்றதோ அதைப்போல தெய்வீக ஞானம் என்னும் நெருப்பானது ஒருவரின் முற்காலச்செயல்களின் வினைகளை எரித்து சாம்பலாக்குகின்றது. அர்ஜுனனே! (ப.கீ. 4.36, 37)
- முழுமுதற்கடவுள் ப.கீ. 18.66 இல் கூறுகின்றார் “அர்ஜுனனே, (மனக்கற்பனையினால் உண்டாகும்) அனைத்துவித தர்மத்தை நீ கைவிட்டுவிட்டு, எனது போதனைகளை (தெய்வீக ஞானத்தை) கடைபிடித்து நீ என்னில் சரணடைவாயாக. எல்லா பாவங்களிலிருந்தும் நான் உன்னை விடுபடுத்துவேன். பயப்படாதே”.
9
‘யாகம்’ வேறு ஒன்றுமில்லை (விதிக்கப்பட்ட கடமைகள் ரூபத்தில்) பரப்ரம்மனின் திருப்திக்காக செய்யப்படும் தன்னலமற்ற செயல்களேயாகும். யாகத்தை தவிர மற்றனைத்து செயல்களும் ஒருவனை இஜ்ஜடவுலகில் பந்தப்படுத்தக்கூடியதாகும் ஏனென்றால் அவைகள் வினைகளை உருவாக்கக்கூடியதாகும். (ப.கீ. 3.9)
தியாகச்செயல்கள் (ஒருவனது தொழிலின் மூலமாக), தானம் (ஒருவனது ஆஸ்ரமத்தின் மூலமாக) மற்றும் ஆன்மீக-தவம் (ஒருவனது சாதனா மூலமாக) இவைகளையென்றும் கைவிட்டுவிடக்கூடாது. தியாகச்செயல்கள், தானம் மற்றும் ஆன்மீக-தவம் மகாத்மாக்களையும் தூய்மைபடுத்துகின்றது, ஆனால் இவைகளை எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு கடமையாக செய்யவேண்டும், பார்த்தனே (சடங்காக அல்ல), இதுவே எனது இறுதியான தீர்ப்பாகும். (ப.கீ. 18.5,6)
- பரமபுருஷரே மேலே குறிப்பிடுவதைப்போல (இதுவே அவருடைய இறுதியான தீர்ப்பாகும்), இதுவே முழு பகவத்கீதையின் சாரமாகும்.
முழுமுதற்கடவுள் கூறினார்: பார்த்தனே, நீ எனது அறிவுரைகளை முழு மனஈடுபாட்டுடன் கேட்டாயா? உனது அறியாமையும், மயக்கமும் இப்பொழுது அகன்றதா? தனஞ்செயனே! (ப.கீ. 18.72.)
அர்ஜுனன் கூறினான்: அச்சுதரே! எனது பிரம்மை இப்பொழுது நீங்கி விட்டது. உங்களது கருணையினால் நான் மீண்டும் எனது நினைவை திரும்பப்பெற்றேன், இப்பொழுது நான் திடமாக நிலைபெற்று அனைத்து வித சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு தங்களது வழிகாட்டுதலின்படி செயல்பட தயாராகவுள்ளேன். (ப.கீ. 18.73.)
யோகேஸ்வரர் (கிருஷ்ணர், முழுமுதற்கடவுள்) எங்கிருந்தாலும் மேலும் தனுர்-தரன் (அர்ஜுனன், தூய பக்தன்) எங்கிருந்தாலும், அங்கு நிச்சயமாக செல்வம், வெற்றி, அசாதாரண வலிமை, மனவுறுதி மற்றும் நீதியும் இருக்கும். (ப.கீ. 18.78)
தாஸ்ய, சக்ய, வாத்ஸல்ய மற்றும் ஷ்ருங்கார இந்நான்கு திவ்ய உறவுகள் மூலமாக ஒருவனால் சுயம்-ரூப அதாவது நபர்-ரூப கிருஷ்ணரின் இனிய மற்றும் மிக நெருங்கிய சம்பந்தத்தை சுவைக்க இயலும் இதனால் கிருஷ்ணர் அடிபணிவார் (தூய அன்பினால்). (ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் ஆதிலீலை 3.11) (இது தன்னின் (உயிர்வாழி-ஜீவாத்மாவின்) செயல் உடலினுடையது அல்ல)
“கடமைகள் இந்த உலகத்தில் உறவுகள் அந்த உலகத்தில்”